வெக்காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :4226 days ago
சேலம்: சேலம், ஜாகீர் காமிநாயக்கன்பட்டி காட்டு வளவு பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா நடந்தது.ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். பலர் பூங்கரகம் மற்றும் தீ சட்டி ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், பூ மிதி விழா நடந்தது.