உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கோத்தகிரி: கோத்தகிரி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதில், காலை 6:00 மணிக்கு, மங்கள இசையுடன் நாடி சந்தானம், நான்காம் காலயாகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு, யாத்ராதானம், கடம்புறம்பாடு, ரிஷப லக்கினத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக யாக பூஜைகளை வேத சிவ ஆகம முறைப்படி, தயானந்தபுரி சுவாமிகள் தலைமையில், சாகித்ய ஸ்ரீ வைணவக்கடல் புலவர் கிருஷ்ணமூர்த்தி, சிவஸ்ரீ சிவமணிகண்ட சாஸ்திரிகள் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !