உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

நாகர்கோவில : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாள் திருவிழாவையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து பானைகளில் சோறு மற்றும் பதார்த்தாங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படைத்து ஒடுக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இந்து சேவா சங்கம் சார்பில் மாநாட்டு திடலில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சிந்தனை சொல்லரங்கம், சமய மாநாடு போன்றவை நடைபெற்றன.விழா நிறைவுநாளான நேற்று குமரி, நெல்லை மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். பெண்கள் பெங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். இதனால் மண்டைக்காடு கோயில், கடற்கரை பகுதி, மண்டைக்காடு சந்திப்பு, கோயிலலை சுற்றியுள்ள தென்னந்தோப்புகளில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணி மற்றும் கண்காணிப்பு பணியியல் போலீசார் ஈடுப்டடனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !