பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :4347 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்புபூஜை நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பால, தயிர், பழங்கள், பன்னீர் என 21 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடந்தது.மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பொதுக்கள் சுவாமி த ரிசனம் செய்தனர்