உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்

திருப்புல்லாணி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் பாரி மந்தைக்கு வந்தவுடன் ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சக்தி கரகம் முன்னே செல்ல பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். நேற்று மாலை பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்று கொட்டக்குடி ஆற்றில் கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை பள்ளப்பச்சேரி கிராம முக்கியஸ்தர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !