உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லது நாலுக!

நல்லது நாலுக!

மந்திரம் என்பது வெறும் சொல் மட்டுமல்ல. அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் விசேஷ சக்தி உண்டு.மந்திரங்களில் வரும் க என்னும் எழுத்துக்கு உயர்வுஅதிகம் என்கிறது சாஸ்திரம். காலையில் எழுந்ததும் நாலு கா வை மனதில் தியானித்தால் போதும். அந்த நாள் நல்லநாளாக அமைவதோடு, பிறவித்துன்பம் நீங்கி மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்கிறார் காஞ்சிப்பெரியவர்.கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதேசதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே என்பது அந்த ஸ்லோகம். இதில் கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்னும் க வரிசையில் தொடங்கும் நான்கு பேர்கள் இடம்பெற்றுள்ளன. வடமாநில மக்கள் காலையில் எழுந்ததும், மனதிற்குள் இந்த ஸ்லோகம் சொல்லி இந்த நான்கையும் வணங்கிக் கொள்வது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !