உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜாவின் பாத கிரீடம்!

ராஜாவின் பாத கிரீடம்!

ராஜாவுக்கே ராஜா, சக்கரவர்த்தி, மன்னர் மன்னன் என்றெல்லாம் பெயர் பெற்றவன் ராஜராஜசோழன். ஆனால், அவன் தலையில் நவரத்தின கிரீடம் சூட்டிக் கொண்டு நாட்டுக்குமன்னனாக இருப்பதை விட,உலகின் உண்மையான ராஜாவாக இருக்கும் சிவபெருமானின் பாதத்தை தலையில் தாங்கி இருப்பதே பெரிய ஆபரணம் என்னும் பொருளில் சிவபாதசேகரன் என்ற சிறப்பு பெயர் கொண்டிருந்தான்.நாவுக்கரசர், புகழ்ச் சேவடி என் மேல் வைத்தாய் நீயே என்று தேவாரத்திலும், ஆதிசங்கரர்,சிரஸி தயயா தேஹி சரணௌ என்று சவுந்தர்ய லஹரியிலும் இறைவனின் திருவடி பெருமையை போற்றுகின்றனர். அதே வழியில் நாட்டுக்கு ராஜாவானாலும்,சிவபாத சேகரன் என்று தனக்கு ஒரு பெயரை உண்டாக்கி, தன் மனதைச் சிவனுக்கே கொடுத்தவன்ராஜராஜசோழன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !