மன்னிப்போம் ... மறப்போம்!
ADDED :4622 days ago
பாலசந்திரன் என்ற பெயரைக் கேட்டதும், குழந்தை சந்திரன் என்று தான் பொருள் சொல்வோம். ஆனால், இப்பெயர் பிள்ளையாருக்கு உரியது என்கிறார் காஞ்சிப்பெரியவர்.விநாயகருக்குரிய சோடஷ (பதினாறு) நாமங்களில் இதுவும் ஒன்று. சமஸ்கிருதத்தில் பால என்றால் நெற்றி . நெற்றியில்நிலவைச் சூடியிருக்கும் விநாயகருக்கு, பாலசந்தர் என்று பெயர். விநாயகரின் உருவம் கண்டு சிரித்த சந்திரனை, அவர்தேய்பிறையாகும்படி சபித்தாலும், பின் மன்னித்து ஏற்றுக் கொண்டார். நிலவைத் தலையில் சூடிக் கொண்டு நடனம்ஆடியதால், விநாயகருக்கு நிருத்த கணபதி, நர்த்தன கணபதி, கூத்தாடும் பிள்ளையார் என்றெல்லாம் பெயருண்டு. மன்னிப்போம்! மறப்போம் என்னும் வார்த்தைக்கு விளக்கமே விநாயகர் தான்.