கதையல்ல நிஜம்!
ADDED :4622 days ago
இதிஹாஸம் என்றால் இப்படியாக நடந்தது என்று பொருள்.இதிலுள்ள ஹ என்பதற்கு சத்தியமாக, நிச்சயமாக என்று அர்த்தம். அதாவது கொஞ்சம் கூட பொய் கலக்காதது. ஆனால், அதன்புனிதத்தை அறியாதவர்கள் தான், பொய் புரட்டு என்றெல்லாம்தவறாகச் சொல்கிறார்கள்.வால்மீகி ,உலகிலேயே உத்தமான குணம் கொண்டவன் யார்? என்று கேள்வி கேட்க, நாரதர் ராமனின் வரலாற்றை விளக்கிக் கூறினார். அதன்பின், வால்மீகி, அதை ராமாயண காவியமாக லவகுசர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதை அவர்கள் இருவரும் ராமனின்முன்னிலையில் பாடினார். இதுபோல, மகாபாரதத்தை பாண்டவர்களின் கொள்ளுப்பேரனான ஜன்மேஜயனுக்கு வைசம்பாயனர் கூறியதாகவும், அதை வியாசர் ஸ்லோகங்களாகச் சொல்ல, விநாயகர் தன் தந்தத்தால் எழுதியதாகவும் வரலாறு சொல்கிறது.