மந்திரம் விரைவில் ..
ADDED :4622 days ago
ஓம் கணேசாய நம, ஓம் சரவணபவ, ஓம் சிவாய நம போன்ற தெய்வ மந்திரங்களைதினமும் ஜெபித்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். கடவுளிடம் வைத்த கோரிக்கை விரைவாக நடந்தேறும். தூய சிந்தனை பிறக்கும். அவரவருக்குரிய இஷ்ட தெய்வ மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்குவதற்கு குறிப்பிட்ட நாட்கள் விசேஷமானவை என்கிறது சாஸ்திரம். சூரிய, சந்திர கிரகண நாட்களில்,கிரகணவேளையில், ஒரு குருவிடம் உபதேசம் பெற்று ஜெபிக்கத் தொடங்குவது சிறப்பு. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, தை முதல் ஆனி வரை வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி வரையான 15 நாட்கள் உகந்தவை.