நத்தம் மாரியம்மன் மாசிப்பெருவிழா.. இன்று வழுக்கு மரம் ஏறுதல்!
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திரு விழாவை முன்னிட்டு இன்று வழுக்கு மரம் ஏறிய பின் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாசிப்பெரு விழா மார்ச் 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.கரந்தன் மலை கன்னிமார் கோயில் தீர்த்தம் எடுத்து அரண்மனை சந்தனக்கருப்புக் கோயிலில் அர்ச்சனை செய்து பின் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் காப்பு கட்டினர். அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயம், சிம்மம், அன்னவாகனம் ஆகிய பல்லக்கில் நகர் உலா வந்தார். பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து வழிபட்டனர்.விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அக்னிசட்டி எடுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், மாலை பூக்குழி இறங்குதல், பின் கம்பம் கொண்டு போய் அம்மன் குளம் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின் றன.ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சுப்புராசு, சின்னராசு, நடராசு மற்றும் செயல்அலுவலர் செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.