உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியபுரவடையில் மழை வேண்டி சிறப்பு யாகம்

ஆரியபுரவடையில் மழை வேண்டி சிறப்பு யாகம்

அவலூர்பேட்டை: ஆரியபுரவடையில் மழை வளம் வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியத்தில் மழை பொய்த்து போனது. இதனால் வளத்தி ஊராட்சியில் உள்ள ஆரியபுரவடை கிராமத்தில் ஐயானாரப்பன் கோவிலில் மழை வளம் மற்றும் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. கிராமத்தை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !