உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதியில் 50 ஆண்டாக அம்மனுக்கு அலங்காரம் செய்து வரும் முஸ்லிம் குடும்பம்!

கமுதியில் 50 ஆண்டாக அம்மனுக்கு அலங்காரம் செய்து வரும் முஸ்லிம் குடும்பம்!

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 50 ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு, பூ அலங்காரம் செய்து வருகிறது முஸ்லிம் குடும்பம். கமுதியில் பிரசித்தி பெற்றது முத்துமாரியம்மன் கோவில். இக்கோயிலில் பங்குனி திரு விழா நடந்து வருகிறது. திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழா, அக்னிச்சட்டி, சேத்தாண்டி(உடலில் சேறுபூசுதல்) வேடம், பால்குடம் மற்றும் முளைப்பாரி நடைபெற்று வருகிறது. இதற்காக தினமும் விதவிதமான பூக்களால் அலங்காரம் செய்ய தேரில் தங்க மற்றும் வெள்ளிநகைகளுடன் அம்மன் தேரில் பவனி வருகிறார். இந்த பூ அலங்காரத்தை இதே பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் பஷீர் செய்து வருகிறார். இவரது தந்தையும், அம்மனுக்கு, 50ஆண்டுகளுக்கு மேலாக அலங்காரம் செய்து வந்துள்ளார். பஷீர் கூறியதாவது: தந்தைக்கு பின், பாரம்பரியம் விட்டுபோய்விடக் கூடாது என்பதற்காக ஆசிரியராக பணியாற்றியபோதும், அம்மனுக்கு ஆண்டுதோறும் இக்கடமையை செய்து வருவது பெருமையாக இருக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !