சென்னை பக்தவச்சல் பெருமாள் கோயில் தேரோட்டம்!
ADDED :4235 days ago
சென்னை: சென்னை பக்தச்சல பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. சென்னை அடுத்த திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில் பிரமோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இத்தேர் சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.