உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்கோடு கோவிலில் தூக்கத் திருவிழா துவக்கம்!

கொல்லங்கோடு கோவிலில் தூக்கத் திருவிழா துவக்கம்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில், தூக்கத் திருவிழா துவங்கியது. குழந்தைக்காக நேர்சை செய்யும் தம்பதியர், குழந்தை பிறந்தவுடன், 3 வயதுக்குள், கோவிலில் தூக்க மரத்தில் ஏற்றுவதே, திருவிழாவில் முக்கிய அம்சம். தூக்கப்புரையில் உள்ள வெங்கஞ்ஞி கோவிலுக்கு, அம்மன் வந்ததும், கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. ஏப்., 2ம் தேதி வரை, இந்த விழா நடைபெறுகிறது. 2ம் தேதி, 40 அடி உயர தூக்கமரத்தில் நிற்பவர்களிடம், குழந்தைகளை கொடுத்து, கோவிலை வலம் வந்து, தூக்க நேர்ச்சை நிறைவு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !