உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் வளாகத்தில் செம்பு சிலை: காசுகள் கண்டெடுப்பு!

கோயில் வளாகத்தில் செம்பு சிலை: காசுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மனக்குடியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரி சின்னப்பா(55). இவர் நேற்று மாலை கோயிலுக்கு விளக்கு போட சென்றுள்ளார்.அப்போது கோயில் வளாகத்தில் ஒருபை கிடந்துள்ளது . பையை சின்னப்பா எடுத்து பார்த்தபோது அதில் 1அடி உய ரமுள்ள கருமாரி அம்மன் சிலையும், 1,166 தங்க நிறத்திலான காசுகளும் இருந்தது தெரியவந்த து. இதுகுறித்து சின்னப்பா அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை தாசில்தார் ராமச்சந்திரன், மண்டலதுணை தாசில்தார் பொன்பாலு, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் விரைந்துசென்று அம்பாள் சிலை மற்றும் காசுகளை கைப்பற்றி தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் அவற்றை பரிசோதித்ததில் அம்பாள் சிலை செம்பாலானது எனவும்,காசுகள் பித்தளையாலானது எனவும் தெரியவந்தது. இதையடுத்து செம்பு சிலை மற்றும் பித்தளை காசுகள் நாகையில் உள்ள அரசுஅருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !