திருமங்கலம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!
ADDED :4247 days ago
திருமங்கலம் : திருமங்கலம் அருகே கிழவநேரி கண்மாயில் 15க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழி கண்டெடுக்கப்பட்டன.இக்கிராமத்து இளைஞர்கள் சிலர், இதை கண்டறிந்தனர். பழங்காலத்தில் முதியவர்கள் இறக்கும் தருவாயில் இருக்கும் போது பெரிய தாழியில் வைத்து மண்ணில் புதைப்பது வழக்கமாக இருந்தது. இத்தாழிகளில் எலும்புகள் மற்றும் பற்கள் கிடைத்தன. இதனை வி.ஏ.ஓ., ஜெகதீசன், திருமங்கலம் தாசில்தார் பாலசுப்பிரமணியத்திற்கு தெரியப்படுத்தினார். தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் ஆய்வு செய்தனர்.கிராமத்தினர் கூறுகையில், 100நாள் திட்டத்தின் மூலம் கண்மாயில் துார்வாரும் பணியில், ஈடுபட்ட போதே இந்த தாழி சிதைக்கப்பட்டு விட்டது. இது மீதமுள்ள அடிபாக தாழி தான். மேலும் இதில் தங்கம் மற்றும் செம்பு தகடுகள் இருந்ததாக கூறப்படுகிறது, என்றனர்.