வனதுர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4247 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் வனதுர்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் திருக்குளக்கரையில் சிறிய அளவில் வனதுர்கையம்மன் கோவில் சீரமைக் கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 25ம் தேதி காலை 11:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து மிருத்யு பூஜை, மற்றும் முதல்கால யாகபூஜைகளும், பூர்ணாஹூதியும் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம்கால யாக பூஜைகளும், காலை 9:30 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தது. காலை 10:05 மணிக்கு விநாயகர், முருகர், நாகர் மற்றும் வனதுர்கையம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சர்வசாதகத்தை அர்த்தநாரீசகுருக்கள் செய்தார். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.