ஏப்.14ல் மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம்!
ADDED :4546 days ago
மதுரை: கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அழகர்மலையில் உள்ள கள்ளழகர் கோயிலில் சுந்தரராஜப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கல்யாணசுந்தரவள்ளித்தாயார் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண விழா ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. 14ம் தேதி காலை நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு பகல் 11 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.