இசக்கியம்மன் கோயிலில் மழை வேண்டி நாதஸ்வர இசை!
ADDED :4222 days ago
நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் மழை வேண்டி நாதஸ்வர கலைஞர்கள் தாணுமூர்த்தி தலைமையில் இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் மழை வேண்டி அமிர்தவர்ஷினி என்ற ராகம் இசைக்கப்பட்டது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் முடிந்து ஒரு வாரம் கழித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வரும் மாதங்களில் கடுமையான கோடைக்காலம் என்பதால் கோடையை தவிர்ப்பதற்காக மழை வேண்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சி கடந்த 12 வருடங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.