உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்கோடு கோயிலில் 1498 குழந்தைள் தூக்க நேர்ச்சை முன்பதிவு!

கொல்லங்கோடு கோயிலில் 1498 குழந்தைள் தூக்க நேர்ச்சை முன்பதிவு!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில். இங்கு பரணி தூக்கத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை முன்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 1498 குழந்தைகள் பெயர் பதிவு செய்யப்பட்டது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் வேண்டி இந்த தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. நேர்ச்சைக்கு தேர்வு செய்ய்பப்பட்ட குழந்தைகளும், குழந்தைகளை கையில் தாங்கியபடி தூக்கமரத்தில் தொங்கும் தூக்ககாரர்களும் விரதத்தை தொடங்கியுள்ளனர். வரும் இரண்டாம் தேதி தூக்கத்திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !