உடுமலை வீரகாமாட்சி அம்மன் கோவில் திருவிழா!
உடுமலை: புதுப்பாளையம் வீரகாமாட்சி அம்மன் கோவிலில், உற்சவத் திருவிழா வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.உடுமலை, புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது வீரகாமாட்சி அம்மன் கோவில். இக்கோவில் உற்சவத் திருவிழா, கடந்த 18 ம் தேதி காலை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தன. நேற்று முன்தினம் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று அம்மனுக்கு தீர்த்தம் காணிக்கையாக செலுத்தப்பட்டது. நாளை இரவு 7.30 மணிக்கு, ஊர் கிணறு வளாகத்தில் சக்தி கும்பம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், காலை 9.45 மணிக்கு, அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 3ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு அபிேஷக பூஜையுடன் உற்சவத் திருவிழா நிறைவடைகிறது.