கல்யாணம் மேளம் கொட்ட காப்புக்கயிறு!
ADDED :4608 days ago
புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஏப்.9ல் சீதா திருக்கல்யாணஉற்ஸவம் நடக்கிறது. அன்று மாலை 6.00 மணிக்கு சீதை, ராமர் திருமணக்கோலத்தில் பவனி வருவர். 6.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவையும், இரவு 7.00க்கு மாலை மாற்றும் வைபவமும், 7.30 மணிக்கு ஜனக மகாராஜாவின் சீதனமாக வஸ்திரம், பழவகைகள் சமர்ப்பித்தலும், 8.30க்கு புண்ணிய யாகம், கங்கண,மாங்கல்ய தாரணமும் சிறப்பாக நடக்கும். பின் வாரணமாயிரம், சீர்பாடல், ஆசிர்வாதம், அர்ச்சனையும் நடந்தேறும். திருமணத் தடை ஏற்படும் ஆண், பெண்கள் ஏப்.11அன்று வழங்கப்படும் ராமர், சீதை காப்புக்கயிறு கட்டிக் கொண்டால், விரைவில் விரும்பிய வகையில் மணவாழ்வு அமையும் என்பர். போய் வாருங்கள், மேளம் கொட்டும்.போன்: 98430 61474, 98941 99562,0413- 264 4339.