ஆரத்தி காட்டும் விதம்!
வீட்டில் விளக்கேற்றி பாடல்கள் ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும்.அது முடிந்ததும், கற்பூர ஆரத்தி அல்லது தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். இறைவனுக்குரிய உபசாரங்களில் விசேஷமானது இது. வழிபாடு செய்பவர் வலக்கையால் ஆரத்தி தட்டினை எடுத்துக் கொண்டு பூஜிக்கும் தெய்வத்தின் அங்கம் முழுவதும் தீபஒளி படருமாறு காண்பிக்க வேண்டும். இதனை பிரணவ மந்திரமான ஓம் வடிவில்மூன்று முறை சுற்றும்படி ஆகம சாஸ்திரம் கூறுகிறது. சில ஆகமங்களில் சுவாமியின் பாதத்தில் நான்கு முறையும், வயிற்றுப்பகுதியில் இருமுறையும், முகத்திற்கு நேராக ஒருமுறையும் சுற்றிய பின், இறுதியில்சுவாமியை முழுவதுமாக மூன்று முறைசுற்றிக் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஸ்லோகம்!
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்!பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்!!பொருள்: மகாதேவனுடைய மனைவியே!சக்தி மிக்கவளே! பவானி தாயே! பரமசிவனிடம் பிரியம் மிக்கவளே! உலக வாழ்வில் இருந்து மீட்டு கரை சேர்ப்பவளே! மனக்கவலைதீர்ப்பவளே! உலகின் தாயே! உன்னைவணங்குகிறேன்.