உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்.9ல் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

ஏப்.9ல் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஏப்.,9ல் நடைபெறுகிறது. இதற்காக கோயில் சுவற்றில் சுண்ணாம்பு பெயர்த்து எடுக்கப்பட்டு, கல்மண்டபங்கள் வார்னிஷ் பெயின்ட் பூச்சால் ஜொலிக்கிறது. ராஜகோபுரம், அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களின் கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவடைந்துள்ளன. பல ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த பள்ளியறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்., 4 ல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்க உள்ளது. ஏப்.,5ல் காலை முதல் யாகசாலை பூஜையும், தொடர்ந்து மூன்று நாட்கள் ஐந்து கால யாகபூஜை, பூர்ணாகுதி நடக்கவுள்ளது. ஏப்., 9 காலை ஆறாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மகா பூர்ணாகுதி, 9.15 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சவுந்தர்யநாயகி - நாகநாதசுவாமிக்கும் சிறப்பு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா வரவுள்ளனர். யாகசாலை பூஜைகளை, திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான குருக்கள் நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சேதுபதிராணி ராஜேஸ்வரி, திவான் மகேந்திரன், பொறுப்பாளர் தெய்வச்சிலை ராமசாமி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !