விழுப்புரம் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4208 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு, தேவி நகரிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவசையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை சிறப்பு பூஜைகளும், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நிர்மலா அம்மாள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.