வடாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் ஏப்., 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!
திருத்தணி: வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், ஏப்., 4ம் தேதி, பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 10ம் தேதி, கமலத் தேர் திருவிழா நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலாக திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் விளக்குகிறது. இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, ஏப்., 4ம் தேதி காலை, 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 14ம் தேதி வரை விழா தொடர்ந்து நடக்கிறது. முன்னதாக, நாளை (ஏப்.2) காலை, 9:00 மணிக்கு, பந்தக்கால் நடும் விழாவும், 3ம் தேதி இரவு, மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 10ம் தேதி, கமலத் தேர் திருவிழாவும், 14ம் தேதி, திருஊடல் உற்சவமும் நடக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு நாளும் உற்சவமூர்த்தி சோமாஸ்கந்தர், காலை, இரவு ஆகிய வேளைகளில் ஒரு வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.