உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலத்தில் கோவில் திருவிழா

மயிலத்தில் கோவில் திருவிழா

மயிலம்: மயிலம் பங்குனித் திருவிழாவில் மயிலியம்மன் வளையல் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மயிலம் மயிலியம்மன் கோவில் திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.29ம் தேதி நான்காம் நாள் உற்சவத்தில் ஆட்டு கிடா வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 30ம் தேதி ஐந்தாம் நாள் விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று 31ம் தேதி காலை சுவாமிக்கு மகா தீபாராதனை வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. கலர் வளையல்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !