சபரிமலை அய்யப்ப சேவா மாவட்ட சமாஜ் துவக்க விழா
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜின் மாவட்ட துவக்க விழா நடந்தது. தனகோட்டி தலைமை தாங்கினார். அண்ணாமலை வரவேற்றார். பச்சையப்பன், ஆனந்தன், ராதா மணி, ரங்கநாதன், கலிய பெருமாள், ராமு, வரதராஜன் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்களுக்கு மத்திய சங்க நிர்வாக செயலாளர் மணியன் சான்றிதழ்கள் வழங்கினார். அமைப்பு செயலாளர் நடராஜ பிரபு, சபரிமலை முகாம் அலுவலர் மூர்த்திசுவாமி, கோட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சிவராமன், கடலூர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட தலைவர் பச்சையப்பன், மாவட்ட கவுரவ தலைவர் ஜனார் தனன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் குணசேகர், மாவட்ட அன்னதான கமிட்டி தலைவர் அண்ணாமலை, மாவட்ட சட்ட ஆலோசகர் முருகன் தேர்வு செய்யப்பட்டனர். சக்திவேல் நன்றி கூறினார்.