உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்!

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று மாலை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாலை 6.00 மணிக்கு, நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் வாசிக்கப்பட்டு, விழாவுக்கான நோன்பு சாட்டப்பட்டது. மூலவர் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. வரும் 8 ம்தேதி இரவு 7.00 மணிக்கு, கம்பம் போடுதலும், 10ம் தேதி இரவு 12.00 மணிக்கு, கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும் நடக்கின்றன. திருவிழா கொடியேற்றம் வரும் 11ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன் நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 2.00 மணிக்கு, பூவோடு ஆரம்பம், அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 16ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், பிற்பகல் 3.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 17 ம்தேதி, காலை 6.45 மணிக்கு, அம்மன் திருத்தேர் எழுந்தருளலும், மாலை 4.00 மணிக்கு, திருத்தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !