உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் 5-ம் தேதி பங்குனி தேர் திருவிழா

ஸ்ரீரங்கம் கோவிலில் 5-ம் தேதி பங்குனி தேர் திருவிழா

ஸ்ரீரங்கம்:   திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில்  பங்குனி தேர்த்திருவிழா  வரும் 5-ம்ந் தேதி   தொடங்கி 15-ம் தேதி வரை  நடக்கிறது..
இதையொட்டி  அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடியேற்ற மண்டபம் சென்றடைகிறார்.   5 மணியளவில் கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றம் முடிவடைந்ததும் காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகி 7 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.   விழா  முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  வரும் . 13-ம் தேதி நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !