உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபநாசம் ராமர் கோயில் ஏப்.9ல் தேரோட்டம்

பாபநாசம் ராமர் கோயில் ஏப்.9ல் தேரோட்டம்

பாபநாசம் : பாபநாசம் அருகேயுள்ள புள்ளபூதங்குடியில் உள்ள வல்வில் ராமர் கோயில் பிரம்மோத்ச விழா கடந்த 30ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோத்சவத்தையொட்டி, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழா நாள்களில் தினமும்  சூரிய பிரபை, கருட வாகனம், அனுமன்வாகனம், யானை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம்  9ம் தேதி காலை  நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !