அரியலூர் கலியுக வரதராசபெருமாள் கோவிலில் கொடியேற்றம்
ADDED :4241 days ago
அரியலூர்: அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராசப் பெருமாள் கோவிலில் வருகிற 8-ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அன்று சூரிய வாகனத்தில் சுவாமியின் திருவீதியுலா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 9-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் வெள்ளி சிம்மம், புன்னை மர,வெள்ளி சேஷ, கருட, யானை என ஒவ்வொரு நாளி லும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
விழா முக்கிய நிகழ்வாக வரும்17--ம் தேதி ஏகாந்த சேவையும், வெள்ளிப்படிச்சட்டம் மஞ்சள் நீர் மற்றும் பாலிகை நீர்த் துறை சேர்த்தலும் நடை பெறுகிறது.