வாணியம்பாளையம் சஞ்சீவிராயர் கோவிலில் திருமஞ்சன விழா
ADDED :4241 days ago
விழுப்புரம்:வாணியம்பாளையம் சஞ்சீவிராயர் கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருமஞ்சனம் விழா வரும் 8ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் சஞ்சீவிராயர் கோவிலில், வரும் 8ம் தேதி ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருமஞ்சன விழா நடக்கிறது. காலை 11 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், அதனை தொடர்ந்து ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளின் உள் புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.