உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை ஐயப்பன் கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா

நாகை ஐயப்பன் கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா

நாகை : நாகை,  ஐயப்பன் கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 2–ந் தேதி தொடங்கி வருகிற 13–ந் தேதி முடிவடைகிறது. விழாவையொட்டி கோவிலில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  வரும்   13–ம் தேதி காலை பிராயச்சித்த ஹோமங்களும், சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !