மன்னீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா!
ADDED :4241 days ago
அன்னூர் : மன்னீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் தலைமை வகித்தார். நேற்று காலை 63 நாயன்மார்கள் சிறப்பு அலங்காரத்தில் ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக கோவிலை அடைந்தனர். வழியெங்கும் பக்தர்கள் நாயன்மார்களை வரவேற்று வழிபட்டனர். தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சிவனடியார்கள் திரளாக திருவீதியுலாவில் பங்கேற்றனர்.