நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா!
ADDED :4242 days ago
ராசிபுரம்: மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் தீ மிதிப்பதற்கு முன்னதாக சாமியை சப்பரத்தில் வைத்து பூசாரிகள் குண்டத்தில் தீ மிதித்தவாறு தூக்கி சென்றனர். விழாவில் ஸ்வாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.