கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!
ADDED :4242 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான விழா ஏப்ரல் 4ம்தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 10.15 மணி முதல், மதியம் 12 மணிக்குள் துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று முதல், 10ம்தேதி வரை ஸ்வாமி மற்றும் அம்மன் புறப்பாடு நடக்கிறது. மேலும், 11ம்தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், 13ம்தேதி திருத்தேர் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.