இலவச சமஸ்கிருத பயிற்சி!
ADDED :4244 days ago
கோவை : சமஸ்கிருத பாரதி சார்பில், கோவையில் இரண்டு இடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள், இன்று முதல் 10 நாட்களுக்கு நடக்கின்றன. ராம்நகர், ராமர்கோவில் பஜனை மண்டபத்தில் தினமும் காலை 7.00 முதல் 9.00 மணி வரையும், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா நடுநிலைப்பள்ளி வளாகத்தில், தினமும் மாலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஏற்கனவே சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் விபரங்களுக்கு, 94433 94367, 94433 94368 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.