திண்டிவனம் நிதீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4301 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அருகே, அன்னம்புத்தூர், நிதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, அன்னம்புத்தூர் கிராமத்தில், கனகதிரிபுரசுந்தரி அம்பிகா சமேத நிதீஸ்வரர் கோவில் உள்ளது. மன்னர் ராஜராஜ சோழன், திருப்பணி செய்து, நிதீஸ்வரரை வழிபட்டுள்ளார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் செங்கல் கட்டடம் என்பதால், காலப்போக்கில், மண்ணில் மறைந்தது. லிங்கம் மட்டும், மண் மேட்டின் மேல் பகுதியில் இருந்தது. பழுதடைந்த இக்கோவிலைச் சீரமைக்க, அறக்கட்டளை நிறுவி நன்கொடை மூலம், கிராம மக்கள், இரண்டு ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகளைச் செய்தனர்.பணிகள் முடிந்த நிலையில், நாளை (9ம் தேதி) காலை 10:15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.