உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!

நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!

பரமக்குடி : நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, 7.15 மணிக்கு தீர்த்த கலசங்கள் புறப்பாடாகி, 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோயில் பிரகாரத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாளுக்கு "நவஅக்னி குண்டங்களும், விநாயகர், முருகன், புத்தடி நாகநாதருக்கு "பஞ்சாக்னி குண்டமும், மற்ற பரிவார தெய்வங்களுக்கு 18 ஏககுண்டங்கள் உட்பட மொத்தம் 51 அக்னி குண்டங்களும், 23 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதிராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், பொறுப்பாளர் தெய்வச்சிலை ராமசாமி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !