பக்தர்களின் வசதிக்காக கேதர்நாத் கோவில் மே 4ல்திறப்பு!
ADDED :4208 days ago
டேராடூன்: வரும் மே மாதம் 4-ம் தேதி கேதர்நாத் கோவில் பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட இருப்பதாக மாநில முதல்வர் ஹரீஸ்ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக கேதார்நாத் கோயில் மோசமாக பாதிக்கப்பட்டது.அவை தற்போது சீரமைக்கப்பட்ட வரும் மே மாதம் 4-ம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டும் பட்சத்தில் பக்தர்களை காப்பாற்றுவதற்காக மீட்பு குழு தயார் நிலையி்ல் வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 2-ம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களும், மே 4-ம் தேதி கேதர்நாத்தும், 5-ம் தேதி பத்ரிநாத் கோவி்ல்களும் திறக்கப்பட உள்ளதாக தெரிவி்த்தார்.