கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்
ADDED :4516 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் நடத்தினர். காலையில் சீதை, ராமர் லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்சவர்களுக்கு அலங்கார திரு மஞ்சனம் செய்து வைத்தனர். மாலையில் சிறப்பு அலங்காரம் செய்து, சாற்றுமுறை சேவை, உபச்சார பூஜைகள் செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலிலும் ராமநவமி உற்சவம் நடந்தது.