உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் மாகாளியம்மன் கோயில் விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

திருப்பூர் மாகாளியம்மன் கோயில் விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகரில் மாகாளியம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலின் பொங்கல் சாட்டு விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று  அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !