உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையக்குடி பெருமாள் கோயில் தேரோட்டம்

கடையக்குடி பெருமாள் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை  மாவட்டம் கடையக்குடி பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோயிலில்  தேரோட்டம்   நடைபெற்றது. கடந்த  மார்ச் 31 -ம் தேதி முதல் நாளில் அனுக்ஞை வாஸ்துசாந்தி பூஜையுடன் கருடன் கொடியேற்றுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் நடைபெற்ற மண்டகபடி நிகழ்ச்சியில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் திருவாதர அர்ச்சனை தீபாராதனயுடன் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழா முக்கிய நாளான நேற்று  தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராமர்,சீதை மற்றும் லெட்சுமணர் ஆகியோர் பட்டாடையுடன் மலர்களால் அலங்கரிக்கபட்டு   எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !