சிவகாசியில் பங்குனி பொங்கல், தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்!
ADDED :4236 days ago
சிவகாசி : சிவகாசி இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான, மாரியம்மன் கோயில், பங்குனி திருவிழா, 10 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும், அம்மன் சிறப்பு அலங்காரம், பல்வேறு வாகனங்களில் வீதஉலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம்,அம்மன் தேருக்கு எழுந்தள, நேற்று காலை, நாட்டாமைகள் ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, மாலையில் சின்ன தேரில் விநாயகர் எழுந்தருளி, ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். அதன்பின், மாரியம்மன் எழுந்தருள, தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கீழ ரதவீதி, தெற்கு ரத வீதியில் சென்றது. தேர் நிலைக்கு வந்த பின், அன்ன வாகனத்தில் அம்பிகை எழுந்தருளுவார். தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.