தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் விழா துவக்கம்!
ADDED :4236 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட, தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், பங்குனி பொங்கல் விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி தருகிறார். எட்டாம் நாளான்று பொங்கல் விழா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழாவாக, தீச்சட்டி எடுத்தல் மற்றும் பூக்குழி இறங்குதல் நடைபெறும். பத்தாம் நாள் விழாவில், தேரோட்டம் நடக்கிறது. அன்று அம்மன், புஸ்ப பல்லக்கில் எழுந்தருளி, நகர் வலம் வருகிறார். ஏற்பாடுகளை, சாலியர் உறவின்முறையினர் செய்கின்றனர்.