உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் நிதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!

திண்டிவனம் நிதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அன்னம் புத்தூர் கிராமத்தில் புனரமைப்பு செய்யபட்ட கனக திரிபுரசுந்தரி அம்பிகா சமேத நிதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 6 ம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 7 ம் தேதி காலை இரண்டாம் காலமும், இரவு 8 மணிக்கு மூன்றாம் காலமும், 8 ம் தேதி காலை நான்காம் காலமும், இரவு 8 மணிக்கு ஐந்தாம் காலமும், நேற்று முன்தினம் காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்தது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை அர்ச்சகர் பிச்சை குருக்கள், காலை 10.15 மணிக்கு மூலவர் விமான கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அதே நேரத்தில், அம்பாள், விநாயகர், முருகர், பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் சன்ன தி களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கும் அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானங்கள் வழங்கபட்டது. பிச்சை குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ கார்த்திகேயன் உள்ளிட்ட குருக்கள் குழுவினர் யாக சாலை பூஜைகளை நடத்தினர். வீரமணி ராஜூ குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது, பக்தி சொற்பொழிவுகள், பரதநாட்டியம் நடந்தன. சிவ வாத்தியங்கள் முழங்கபட்டது. திருமறை, பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்தனர். ஸ்தபதி முனைவர் பன்னீர் செல்வம், திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருமண கோலத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !