அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழா!
ADDED :4237 days ago
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழா துவங்கியது. முக்கிய விழாவாக நேற்று நடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். இதில் பக்தர் ஒருவர் 51 அக்னி சட்டிகளை எடுத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.