உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை விசு கனிகாணல் நிகழ்ச்சி

தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை விசு கனிகாணல் நிகழ்ச்சி

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் உள்ள பிரசக்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கேயிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு கனிகாணல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜை, புனஸ்காரங்கள் அனைத்தும் கேரள விதிமுறை படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுவது மரபு. தமிழகத்தில் 14-ம் தேதி சித்திரை விசு கொண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சித்திரை விசு மற்றும் கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் கேரள விதிமுறைபடி பூஜை நடைபெறும் சுசீந்திரம் தாமாலய சுவாமி கோயில் சித்திரை விசு கனிகாணும் நிகழ்ச்சி 15-ம் தேதட நடக்கிறது. இதையொட்டி மூலஸ்தானமான தாணுமாலய சுவாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் தாணுமாலய சுவாமியின் உருவ படத்தை பெரிய அளவில் வரைந்து அதை சுற்றிலும் அனைத்து விதிமான கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலைகண்ணாடியும் வைக்கப்படும். மூலவராகிய தாணுமாலய சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க குடங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்படும். இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவர். மேலும் கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் கைநீட்டமும், காய் கனிகளும் பிரசாரமாக வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !